அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
அறச்சலூர்
அறச்சலூர் அருகே உள்ள நாச்சிவலசு பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 26). தனியார் வங்கி ஊழியர். மொடக்குறிச்சியை அடுத்த ஊத்துக்குளியை சேர்ந்தவர் சாந்தினி (21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நவீனும், சாந்தினியும் உறவினர்கள் என கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் கடந்த 1 ஆண்டாக காதலித்து வந்து உள்ளனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி அறச்சலூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் காதால் ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து நவீனுடன் சாந்தினியை போலீசார் அனுப்பி வைத்தனர்.