பள்ளி வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு முக்கியம்

பள்ளி வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமானது என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

Update: 2023-08-08 18:45 GMT

பள்ளி வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமானது என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

பயிற்சி முகாம்

திருவாரூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கினார்.

திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், பேரளம் பேரூராட்சி தலைவர் கீதா நாகராஜன், நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராஜசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கலெக்டா சாருஸ்ரீ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் பிரதிநிதிகள்

பள்ளி மேலாண்மை குழுவில பெற்றோர், ஆசிரியர்களுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக்குழுவாகும்.

இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்திட வேண்டும். பள்ளி வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமானது இவ்வாறு அவர் கூறினார். இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், சங்கர், வரதராஜன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்