சாலையோர புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்

சாலையோர புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்

Update: 2022-07-11 13:07 GMT

பந்தலூர்

தமிழக-கேரள எல்லையில் பாட்டவயல் உள்ளது. கூடலூரில் இருந்து தேவர்சோலை, நெலாக்கோட்டை, பிதிர்காடு, பாட்டவயல் வழியாக சுல்தான்பத்தேரிக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோன்று சுல்தான்பத்தேரியில் இருந்து பாட்டவயல் வழியாக கூடலூருக்கு கேரள அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இது தவிர பிற வாகனங்களும் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக பாட்டவயல் சாலை முக்கியமானதாக திகழ்கிறது.

இந்த நிலையில் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. அவை சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை முட்புதர்களின் கிளைகள் பதம் பார்க்கின்றன. இது தவிர சாலையோரத்தில் அபாயகரமான மரங்கள் உள்ளன. அவை சூறாவளி காற்று வீசும்போது சாய்ந்து விழுகின்றன. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோர முட்புதர்களையும், அபாயகரமான மரங்களையும் வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்