தார்சாலையாக மாற்றி தர வேண்டும்

தார்சாலையாக மாற்றி தர வேண்டும்

Update: 2022-12-03 18:45 GMT

குறிச்சி-ராஜகோபாலபுரம் இணைப்பு சாலையை தார்சாலையாக மாற்றி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணைப்பு சாலை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குறிச்சி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். விவசாயம் தான் இவர்களது முக்கிய பணியாகும். இந்த கிராமத்திலிருந்து பஸ்நிறுத்தம் செல்வதற்கு 3 சாலைகள் உள்ளன. இந்த 3 சாலைகளுமே சேதமடைந்துள்ளது. இதில் குறிச்சியிலிருந்து ராஜகோபாலபுரம் இணைப்பு சாலை (நடுரோடு) மிக மோசமான அளவில் சேதமடைந்து போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையை தான் அப்பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். சாலை சேதமடைந்துள்ளதால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தார்சாலையாக மாற்றி தர வேண்டும்

முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ள குறிச்சி பஸ்நிறுத்தத்தில் இருந்து தெற்கு தெரு, கீழத்தெரு வழியாக கோரையாறு வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத் தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் குறிச்சி-ராஜகோபாலபுரம் இணைப்பு சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்