சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்

வாய்மேடு அருகே சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-23 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேடு அருகே சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒற்றையடி பாதை

வாய்மேடு அருகே சேனாதிகாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாடு உள்ளது. இந்த நிலையில் வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.

இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தார்ச்சாலை வேண்டும்

மேலும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சேனாதிகாட்டில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் ஒற்றையடி சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்