குளத்தில் சுற்றுச்சுவர் கட்ட கிராம மக்கள் கோரிக்கை; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
விளாத்திகுளம் அருகே குளத்தில் சுற்றுச்சுவர் கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க கோரி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைதொடர்ந்து எம்.எல்.ஏ. அந்த குளத்தை ஆய்வு செய்து சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.