தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில் 65 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-தர்மபுரி-50, அரூர்-7, பென்னாகரம்-25, ஒகேனக்கல்-5, மாரண்டஅள்ளி-15, பாலக்கோடு-26.2. மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு 27.6 மி.மீ. ஆகும். இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.