தொழிலாளியை கத்தியால் வெட்டிய ரவுடி கைது
நெல்லையில் தொழிலாளியை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 29). தொழிலாளி. சம்பவத்தன்று இவரின் தம்பியுடன், வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவைச் சேர்ந்த பழனி மகன் பேராட்சி செல்வம் (25) மது குடித்து கொண்டிருந்தாராம். இதனை சண்முகராஜ் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பேராட்சி செல்வம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சண்முகராஜை வெட்டினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராட்சி செல்வத்தை கைது செய்தனர்.
கைதான பேராட்சி செல்வம் மீது பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.