கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

Update: 2023-04-25 20:56 GMT

அழகியபாண்டியபுரம்,:

பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம், அருள்ஞானபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கோழி கூட்டுக்குள் மலைப்பாம்பு புகுந்தது. இதனால் கோழிகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் விரைந்து வந்து கூட்டுக்குள் பார்த்த போது அந்த மலைப்பாம்பு ஒரு கோழியை பிடித்து விழுங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வேளிமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்