பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டனர்

பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டனர்

Update: 2022-06-19 15:51 GMT

வாணியம்பாடி

நாட்டறம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சி பகுதியில் 500 மரக்கன்றுகள் நடும் பணி கடந்த சில நாட்களாக ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து அம்பலூர்- புத்துக்கோவில் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நடப்பட்டது.

பின்னர் ஒவ்வொரு செடிக்கும் வலை கட்டிபராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர்.

அதே போன்று ஊராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் பணி தொடர்ந்து நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் கூறினார்.

இதில் ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்