சங்கராபுரம் அருகே கழிவுநீர் கால்வாயை தூர்வாரவேண்டும் பொதுமக்கள் கோாிக்கை
சங்கராபுரம் அருகே கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
சங்கராபுரம்
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமம் மேட்டு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.