வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்

அவினாசி அருகே ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-20 11:52 GMT

அவினாசி

அவினாசி அருகே ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மறியல்

அவினாசி பட்டறை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற முதியவர் மது அதிவேகமாக வந்தமோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் முதியவர் உயிரிழந்தார். இதுபோல் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து நடக்கிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு வந்து பட்டறை பஸ் நிறுத்தம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றிய தகவலறிந்து அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் நீண்ட நேரம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

வேகத்தடை அமைக்கப்படும்

பேச்சு வார்த்தையின் முடிவில் இன்னும் 10 நாட்களுக்குள் இந்த இடத்தில் வேகத்தடை அமைப்பதாக உறுதி கூறிய பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 



Tags:    

மேலும் செய்திகள்