மனநலம் பாதிக்கப்பட்டவரை திருடன் என நினைத்து தாக்கிய பொதுமக்கள்

நொய்யல் அருகே திருடன் நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டவரை பொதுமக்கள் தாக்கினர். இதையடுத்து அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.;

Update:2023-10-13 00:23 IST

நொய்யல் குந்தாணிபாளையம் பாதகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரிதிவிராஜ். இவரது வீட்டிற்குள் சம்பவத்தன்று இரவு 3 மர்மநபர்கள் புகுந்துள்ளனர். இதையடுத்து பிரிதிவிராஜ் சத்தம் போடவே அங்கிருந்து வெளியேறிய 3 பேரும் தோட்டத்தின் வழியாக ஓடினர். அப்போது 2 பேர் வேலியை தாண்டி தப்பி விட்டனர். ஒருவர் பிடிபட்டார்.

அவரை அங்கிருந்து பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து வேலாயுதம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் மதுரையில் இருந்து பழனி சென்று அங்கிருந்து வேலாயுதம்பாளையம் வந்துள்ளார். அவர் திருடன் இல்லை என்பதும், அவர் சற்றுமனநலம் பாதிக்கப்பட்டு, வேலாயுதம்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

காப்பகத்தில் ஒப்படைப்பு

பின்னர் அவருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மனநல காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அந்த நபர் திருச்சியில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முழுமையான சிகிச்சை முடிந்து, பின்னர் மறுவாழ்வு மற்றும் தொடர் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் குணம் பெற்று முழு முகவரி கூறியவுடன் அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்