மறைமுகமாக ஏலம் விடுவதாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

விழுப்புரம் நகராட்சி கடைகளுக்கு மறைமுகமாக ஏலம் விடுவதாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்;

Update:2022-11-12 00:15 IST

விழுப்புரம்

விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 14 கடைகளும் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் காலியாக உள்ள 4 கடைகள், கழிவறை கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஆகியவற்றுக்கான பொது ஏலம் நேற்று விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக பணம் டெபாசிட் செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஏலத்தொகையை குறிப்பிட்டு மூடி முத்திரையிட்ட கவரில் காலை 11.30 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டர் பெட்டியில் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி ஏலம் கோருபவர்கள் அதற்கான தொகையை குறிப்பிட்டு டெண்டர் பெட்டியில் செலுத்தினர். இதைத் தொடர்ந்து மாலையில் கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது. அப்போது பொது ஏலம் விடாமல் மறைமுகமாக ஏலம் விடுவதாக கூறி ஏலம் எடுக்க வந்த பொதுமக்கள், அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு தி.மு.க.வினரிடமும் பிரச்சினை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. உடனே பொதுமக்களிடம், கடைகளுக்கான பொது ஏலம் முறையாகத்தான் நடைபெறுகிறது என்று அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்