தாமதமாக வந்த மாணவர்களை அனுமதிக்காமல்கல்லூரியின் நுழைவு வாயில் கதவை இழுத்து மூடிய பேராசிரியர்கள்விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரத்தில் தாமதமாக வந்த மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்காமல் நுழைவு வாயிலை பேராசிரியர்கள் இழுத்து முடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-14 18:45 GMT


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் என 2 ஷிப்டுகளாக கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக மாணவ, மாணவிகள் காலை நேரங்களில் கல்லூரிக்கு தாமதமாக வருவது அதிகரித்து வருகிறது. அரை மணி நேரம் என்றால்கூட பரவாயில்லை, ஒரு மணி நேரம் கழித்து வருவதும், கடமைக்காக கல்லூரிக்கு வந்துசெல்வதுமாக சிலர் இருந்துள்ளனர்.

எனவே மாணவ, மாணவிகள் அனைவருமே குறித்த நேரத்திற்கு கல்லூரிக்கு வர வேண்டுமெனவும், தாமதமாக வருபவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், கதவுகள் மூடப்படும் என்றும் ஏற்கனவே கல்லூரி முதல்வர் சிவக்குமார் எச்சரித்திருந்தார். இருப்பினும் மாணவ, மாணவிகள் சிலர் தாமதமாக கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தனர்.

கதவை இழுத்து முடினர்

இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளை உள்ளே விடாமல் பேராசிரியர்கள் மூலம் கல்லூரியின் நுழைவுவாயில் கதவு இழுத்து மூடப்பட்டது.

அவர்களிடம், உங்களது பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க அனுப்புகிறார்கள். கல்லூரி நடப்பதே 2, 3 மணி நேரம்தான், அதிலும் தாமதமாக வந்தால் என்ன பாடத்தை படிப்பீர்கள்.

இனிவரும் காலங்களில் குறித்த நேரத்திற்கு வர வேண்டுமென தகுந்த அறிவுரை வழங்கி மாணவ, மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்