கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி-கிலோ ரூ.12-க்கு விற்பனை

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.12-க்கு தக்காளி விற்பனை ஆனது.

Update: 2023-09-17 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.12-க்கு தக்காளி விற்பனை ஆனது.

10 டன் தக்காளிகள்

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளிகள் கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிக அளவு தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதிகளில் பருவமழை சரிவரப் பொய்யாததால் கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி வரத்து தாமதமாக தொடங்கியுள்ளது. கிணத்துக்கடவு செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வர தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு மொத்தம் 10 டன் தக்காளிகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.

கிலோ ரூ.12-க்கு விற்பனை

தமிழக மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பல மாவட்டங்களில் தக்காளி வரத்து தொடங்கியுள்ளதால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தற்போது தக்காளி விலை தொடர்ந்து கிடுகிடுவென குறையத் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ.15 ரூபாய்க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய் 25 காசுக்கு ஏலம் போனது. இது கடந்த ஞாயிற்றுக்கிழமைவிட ஒரு கிலோவிற்கு 2 ரூபாய் 75 காசு குறைவாகும். தக்காளி விலை தொடர்ந்து குறைந்த விலைக்கு ஏலம் போவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். திடீரென நேற்று தக்காளி ஒரு கிலோவிற்கு 2 ரூபாய் 75 காசு குறைந்துள்ளதால், தற்போது கிணத்துக்கடவு பகுதியில் சில்லறை கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்