சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைவு
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்துள்ளது.
சென்னை,
தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.