நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

நொய்யல் பகுதியில் கோவில் நிகழ்ச்சிகள், திருமண முகூர்த்த நாள் காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-06-01 17:57 GMT

பூக்கள்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், பேசிப்பாறை, நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

பூக்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் பூக்கள் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

விசாயிகள் மகிழ்ச்சி

கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.350-க்கு விற்றது தற்போது, ரூ.600-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கு விற்றது ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.100-க்கு விற்றது ரூ.170-க்கு விற்றது.

அரளி ரூ.80-க்கு விற்றது ரூ.160-க்கும், ரோஜா பூ ரூ.150-க்கு விற்றது ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கு விற்றது ரூ.280-க்கும் விற்பனையானது.

கோவில் நிகழ்ச்சிகள், திருமண சுப முகூர்த்தங்களை முன்னிட்டு நேற்று நடந்த ஏலத்தில் பூக்கள் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்