உடன்குடியில் பூக்கள் விலை உயர்வு
தசரா திருவிழா, ஆயுத பூஜையை முன்னிட்டு உடன்குடியில் பூக்கள் விலை உயர்ந்தது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன்குடி வழியாக வந்து கொண்டிருக்கின்றனர். பூஜைக்கு தேவையான பூ மாலைகளை அதிகமாக உடன்குடியில் வாங்குவார்கள், மல்லிகைப் பூ, பிச்சிப் பூ ஆகியன ஒரு கிலோ ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பன்னீர், ரோஸ், மஞ்சள்சிவந்தி, வெள்ளைசிவந்தி. பச்சை என அனைத்தும் விலை இரண்டு மடங்கு ஆகிவிட்டது. இதனால் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூ மாலை 50 ரூபாய்க்கும், ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட மாலை ரூ.75-க்கும், ரோஸ் மாலைகள், கதம்ப மாலைகள், பன்னீர் மாலைகள் என அனைத்து பூ மாலைகளும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தசரா திருவிழா மற்றும் ஆயுத பூஜை முடிந்த பின்னரே பூ மாலைகள் விலை குறையும் என்று பூ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.