பலத்த காற்றில் மின் கம்பம் சரிந்து விழுந்தது
பலத்த காற்றில் மின் கம்பம் சரிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புதுக்கோட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமலாப்பூர் பஸ் நிறுத்தம் அருகே திருவேங்கைவாசல் பிரிவு ரோட்டின் பக்கம் மின்கம்பம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. உயர்மின்னழுத்த கம்பிகள் கொண்ட அந்த மின்கம்பம் விழுந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மின் இணைப்பை உடனடியாக துண்டித்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.