குழந்தையின் தலையில் சிக்கிய பானை - தீயணைப்புத்துறையினர் பத்திரமாக அகற்றினர்
குழந்தையின் தலையில் சிக்கிய பானையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக அகற்றினர்
மதுரை சிம்மக்கல் அருகே உள்ள மணிநகரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய 2 வயது மகள், அஸ்வினி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்திற்குள் குழந்தையின் தலை சிக்கி கொண்டது. இதனால், அந்த குழந்தை அலறி துடித்தது. குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு குழந்தையை மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், முடியவில்லை. இதனை தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தலையில் மாட்டிய பானையை வெட்டி எடுத்து குழந்தையை மீட்டனர். தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.