வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
கோவை
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் முஜிபுர்ரகுமான் (வயது 34), பிளம்பரான இவர் நேற்று காலையில் வேலைக்காக கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் வாலாங்குளம் அருகே வந்தபோது திடீரென்று நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து ரத்தம், சொட்ட, சொட்ட அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
அப்போது சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், தனது வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தார். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவரை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்திய இன்ஸ்பெக்டர் அருண், அங்கு ஓடிச்சென்று, படுகாயம் அடைந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இடது காலில் முறிவு ஏற்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட சம்பவத்தை அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு தெரிவித்தார்.