காளை விடும் விழாக்குழுவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

காளை விடும் விழாக்குழுவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-04-07 19:01 GMT

ஒலக்காசி கிராமத்தில் நேற்று முன்தினம் காளை விடும் விழா நடைபெற்றது. விழாவை தேசிய பிராணிகள் நல வாரிய உறுப்பினர் மித்தல் ஆய்வு செய்தார். அப்போது காளை விடும் விழாவின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை, அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்தநிலையில் ஒலக்காசி கிராம நிர்வாக அலுவலர் மோகன் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதில் ஒலக்காசி கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் விழாவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு காளையின் உரிமையாளர்களிடமிருந்து பணம் வசூல் செய்தல், காளைக்கு கிளிப் அடித்தல், கால்நடைக்கு தீவனமும் மற்றும் தண்ணீர் வைக்காமல் இருத்தல், இரட்டை தடுப்புகள் அமைக்காதது போன்ற காரணங்களால் காளை விடும் விழா நடத்திய விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் ஒலக்காசி கிராமத்தில் காளை விடும் விழா நடத்திய விழா குழுவினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்