விஷம் குடித்த மூதாட்டி சாவு

வேதாரண்யம் அருகே விஷம் குடித்த மூதாட்டி சாவு

Update: 2023-04-25 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு, பண்ணைவெளி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி கலையரசி (வயது 60). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று நிலக்கடலை சாகுபடிக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) தவறுதலாக குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி, சப்- இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்