புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு பக்தர்கள் பரவசம்
புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டையில் காசி விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மூலவர் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மூலவர் லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நேற்று காலை 6.45 மணிக்கு நடந்தது. சூரியன் உதித்ததும் கோவில் கருவறை உள்ளே சூரிய ஒளி படர ஆரம்பித்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சிறிது நேரம் இந்த அற்புத நிகழ்வு நீடித்தது. இதை தொடர்ந்து இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நாளையும்(திங்கட்கிழமை) சூரிய தரிசனம் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.