மொபட்டில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சாவு
சோளிங்கர் அருகே மொபட்டில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து இறந்தார்.
அரக்கோணத்தை அடுத்த சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 54). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர், 19-ந்தேதி சின்னகைனூரில் இருந்து சோளிங்கரை நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
சோளிங்கரை அடுத்த கூடலூர் சமத்துவபுரம் அருகே வரும்போது ஓடும் மொபட்டில் இருந்து நிலைத்தடுமாறி திடீரெனச் சாலையில் விழுந்தார். அதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கொண்டபாளையம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.