ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தவர் தவறி விழுந்து பலி

வாணியம்பாடியில் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தவர் தவறி விழுந்து பலியானார்.

Update: 2023-02-02 12:13 GMT

ஒடிசா மாநிலம் ரூர்கேலா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் ஆட்டியா விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென தவறி விழந்து அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்