வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு - குடும்பத்தினருக்கு சபாநாயகர் அப்பாவு ஆறுதல்
பணகுடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குழந்தைகளுடைய கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அப்பாவு உறுதியளித்துள்ளார்.;
நெல்லை,
பணகுடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குழந்தைகளுடைய கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அப்பாவு உறுதியளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே அனுமன் ஆற்றின் குறுக்கேயுள்ள தாம்போதி பாலத்தை கடக்க முயன்ற இசக்கிமுத்து என்பவர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் இசக்கிமுத்துவின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அக்குடும்பத்துக்கு நிதியுதவி அளித்ததோடு, இசக்கி முத்துவின் குழந்தைகளுடைய கல்வி செலவை ஏற்றுக்கொள்ளுவதாகவும் உறுதியளித்தார்.
இசக்கி முத்து மரணத்துக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.