சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது
மணல்மேடு அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்
மணல்மேடு:
மணல்மேடு அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் பட்டவர்த்தி பெரியார் நகர் பகுதிக்கு சென்றனர். அங்கு சவுரிராஜன் (வயது38) என்பவர் வீட்டின் பின்புறம் சோதனை நடத்தி 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனா். மேலும் சவுரிராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.