சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் காட்டுவன்னஞ்சூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சங்கராபுரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு நடந்து வந்து கொண்டிருந்த மர்மநபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர் 300 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(வயது 58) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து ரமேசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.