திருப்புவனம்
திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் திருப்புவனம் வைகை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆற்று பாலத்திற்கு கீழ் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் திருப்புவனம் வடகரை பகுதியை சேர்ந்த அறிவழகன்(வயது 22) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.