விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

விக்கிரமங்கலம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-18 19:03 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பட்ட கட்டான் குறிச்சி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (32). இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று முத்துசாமி அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலின் வெளியே நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த சத்யராஜ் முத்துசாமியை தகாதவார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் முத்துசாமி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்