விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மானூர் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-02 19:16 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள தெற்கு வாகைக்குளத்தை சேர்ந்தவர் ரவி (வயது 43). விவசாயி. இவர் அதே ஊரைச் சேர்ந்த குமார் என்ற முத்துக்குமாரிடம் சில மாதங்களுக்கு முன்பு, தனது நண்பரான களக்குடியைச் சேர்ந்த சிவன் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்துள்ளார். இதையடுத்து குமார், சிவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் சிவன் இதுவரை வட்டியையோ, பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து குமார், ரவியிடம் சென்று சிவனிடம் பணத்தை வாங்கி தருமாறு கூறியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரவி மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்