சொட்டு நீர் பாசன குழாய்கள் திருடியவர் கைது

அரூர் அருகே சொட்டு நீர் பாசன குழாய்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-15 18:51 GMT

அரூர்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீழானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 65). விவசாயி. இவர் தனது மருமகனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாய சாகுபடி பணியை செய்து வந்தார். இந்த நிலையில் சொட்டுநீர் பாசன குழாய்களை விவசாய நிலத்தில் போட்டு வைத்திருந்தார். அதிகாலையில் அங்கு வந்த 2 பேர் சொட்டு நீர்பாசன குழாய்களை திருடி மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர். அவர்களை கீழானூர் பகுதியை சேர்ந்த சிலர் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக சிக்கியவரிடம் விசாரித்த போது எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (40) என்பதும் தப்பி ஓடியவர் ரஞ்சித் (21) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் கருணாநிதி புகார் அளித்தார். அ

Tags:    

மேலும் செய்திகள்