அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடியவர் கைது
அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 30). இவருடைய உறவினர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக மாரிச்செல்வம் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டை காமராஜர் காலனியை சேர்ந்த மதன்குமார் (48) என்பவர் மாரிச்செல்வம் பையில் இருந்த செல்போனை நைசாக திருடினார்.
இதைக் கண்ட மாரிசெல்வம் மற்றும் அங்கிருந்தவர்கள் மதன்குமாரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்னராஜா வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தார்.