ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

Update: 2023-09-16 21:41 GMT

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி, விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காலியிடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு மறைந்திருந்த போலீசார், மொபட்டில் அரிசி மூட்டைகளுடன் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் ஈரோடு சூரம்பட்டி நேரு வீதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 47) என்பதும், ஈரோட்டில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,450 கிலோ ரேஷன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்