பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

பட்டாசு திரி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-08 18:49 GMT

தாயில்பட்டி, 

தாயில்பட்டி அருகே உள்ள கோதைநாச்சியார்புரம் பகுதியில் பட்டாசு திரி வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிராஜீக்கு தகவல் வந்தது. இதையடுத்து விஜயரங்கபுரம், மேலக்கோதை நாச்சியார்புரம், கீழக்கோதை நாச்சியார்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அவர் சோதனை மேற்ெகாண்டார். அப்போது கீழகோதைநாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 45) என்பவர் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 20 குரோஸ் கருத்திரிகளை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்