விமானப்படை முகாம் வளாகத்தில் நுழைந்தவர் கைது
கோடியக்கரை விமானப்படை முகாம் வளாகத்தில் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இந்திய விமானப்படை முகாம் உள்ளது. இந்த முகாமில் விமானப் படை வீரர்கள் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விமானப்படை முகாம் வளாகத்துக்குள் நேற்று ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார். இதை பார்த்த விமானப்படை வீரர்கள், அவரை பிடித்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த கனகராஜ் (வயது39) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்து அவர் ஏன் விமானப்படை முகாமுக்குள் நுழைந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.