6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2022-11-04 17:40 IST

திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஜெகநாதன் லூர்துசாமி, மணி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும், மருத்துவ காப்பீட்டு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும். 20 விழுக்காடு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.12,000 ஆகவும், கடைசி ஊதியத்தில் 50 சதவீதமாகவும் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ரெயில் பயண சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்