கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-20 19:18 GMT

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும். 1-7-2022 முதல் வழங்கப்பட்ட அகவிலைப்படி 3 சதவீதம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர் ஆகிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரெயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் ஜெயவேல், மாவட்ட செயலாளர் மோகன் குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், டி.என்.ஜி.இ.ஏ. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்