மோட்டார் சைக்கிள் மோதி மயில் செத்தது

மோட்டார் சைக்கிள் மோதி மயில் செத்தது

Update: 2022-06-22 19:42 GMT

துறையூர் அருகே உள்ள நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). தனியார் நிறுவன ஊழியரான இவர் துறையூர் மின்சார வாரியம் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில் இவர் பணி நிமித்தமாக திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். காளிப்பட்டி ஏரி அருகே சென்ற போது, ஏரி பகுதியில் இருந்து திடீரென்று மயில் பறந்து வந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் மோதியதில் மயில் செத்தது. கீழே விழுந்த அருண்குமார் காயம் அடைந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்