வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டியை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற கொடூரம்

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டியை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பு துலக்க ஓடிய மோப்ப நாய் ஒரு வீட்டை சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-25 18:45 GMT

தொண்டி,

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டியை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பு துலக்க ஓடிய மோப்ப நாய் ஒரு வீட்டை சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீர் பாய்ச்ச சென்றார்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் மேலக்குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகலிங்கம். விவசாயி. இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 65). இவர்களுக்கு கதிரேசன் (37) என்ற மகனும் அனுராதா (30) எ ன்ற மகளும் உள்ளனர்.

கோவிந்தம்மாள் நேற்று முன்தினம் இரவு நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மகள் அனுராதா தேடிச்சென்றார்.

வயலில் கொலை

வயலில் கோவிந்தம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிந்தம்மாளின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் மோப்ப நாய், கோவிந்தம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு அருகில் உள்ள ஓரியூர் கீழக்குடியிருப்பு பகுதிக்கு சென்று ஒரு வீட்டை சுற்றி வந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

2 தனிப்படை அமைப்பு

இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக, கோவிந்தம்மாளை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்து வயலில் தூக்கி வீசிவிட்டு சென்று இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கோவிந்தம்மாளின் மகள் அனுராதா அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்