வழியில் கிடந்த செல்போனை சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த மூதாட்டி

ஆற்காட்டில் வழியில் கிடந்த செல்போனை, மூதாட்டி ஒருவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.

Update: 2023-07-17 18:36 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலா (வயது 85). இவர் நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழே ஒரு செல்போன் கிடந்தது. பின்னர் அதனை அவர் எடுத்து சென்று ஆற்காடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தார்.

இதன் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த செல்போன் யாருடையது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்