பஸ் நிலையத்தில் இருந்த மூதாட்டி சாவு
பஸ் நிலையத்தில் இருந்த மூதாட்டி உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக, அந்த வழியாக சென்றவர்கள், ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மூதாட்டியின் கையில் அமர்தம் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பஸ் நிலையத்திற்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.