பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்;
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓய்வூதியர் சங்க கூட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் வட்ட பேரவை கூட்டம் பேராவூரணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் கணே.மாரிமுத்து தலைமை தாங்கினார். வட்ட இணைச் செயலாளர் மாணிக்கம் வரவேற்றார். மாவட்டப்பிரதிநிதி சந்திரமோகன் தொடக்க உரையாற்றினார். வட்ட பொருளாளர் ஆவிடைக்குட்டி வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தார். வட்டச்செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
இதில் மாவட்ட துணைத்தலைவர் பூபதி, மாவட்ட இணைச் செயலாளர் பிச்சைமுத்து, மாவட்டத்தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் வட்டச்செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.
பழைய ஓய்வூதிய திட்டம்
கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை வெளிப்படை தன்மையுடனும், அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கட்டணம் இல்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அனைத்து செலவினங்களுக்கும் ஆஸ்பத்திரி ரசீது வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்படாத அனைத்து ஓய்வூதியர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவப்படி வழங்க வேண்டும். கருவூலத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
ரெயில் இயக்க வேண்டும்
பேராவூரணி வழியாக காரைக்குடி - சென்னைக்கு இரவு நேரங்களில் இருமுனைகளில் இருந்தும் ெரயில் இயக்க வேண்டும். அனைத்து விரைவு ெரயில்களும் பேராவூரணி ெரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.