பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கிராம உதவியாளர்கள் சங்க பொன்விழா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-18 19:15 GMT

திருக்கோவிலூர்:

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் திருக்கோவிலூர் வட்டக்கிளை சார்பில் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பாக சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவிற்கான நினைவுக்கொடி ஏற்றப்பட்டு, பெயர் பலகை திறக்கப்பட்டது. இதற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜமாலுதீன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முத்தையா சங்க கொடியை ஏற்றினார். சங்கத்தின் கல்வெட்டை மாநில பொருளாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதனை தொடா்ந்து நடைபெற்ற பொன்விழா கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரஜினி முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் சுந்தர், வட்ட செயலாளர் வரதராஜன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், மாநில இணை பொதுச்செயலாளர் அய்யப்பன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ஷாஜகான், துணைத் தலைவர் முருகன், துணைப்பொதுச்செயலாளர் இம்மானுவேல், துணை செயலாளர் முஹம்மதுகாசிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

In the meeting, several resolutions were passed including giving fourth level grade to village assistants, canceling the new pension scheme and implementing the old pension scheme, giving 50 percent promotion to village administrative officers. In the end, Circle Treasurer Palammal gave vote of thanks.

Tags:    

மேலும் செய்திகள்