லாட்டரி சீட்டு விற்ற முதியவர் சிக்கினார்

போடி அருகே லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-31 19:00 GMT

போடி தாலுகா போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது போடி அருகே உள்ள வெம்பக்கோட்டை பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், வெம்பக்கோட்டையை சேர்ந்த கணபதி (வயது 80) என்றும், அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்