கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

ஆலங்குளத்தில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது ஆடையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-28 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி புஷ்பம் (வயது 75). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பம் நேற்று மாலை சமையல் செய்வதற்காக வீட்டில் கியாஸ் அடுப்பில் தீ பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்