வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-11 18:27 GMT

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில், ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் காண்டிபன் தலைமையில் நேற்று ஆற்காடு அடுத்த புதுபாடி கூட்ரோடு பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக கூறினார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசீன்அலி (வயது 21) என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்படவே அதே ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். காலை நேரங்களில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு அவர்களிடமிருந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மாங்காடு கூட்ரோடு பகுதியில் மாலதி, சாத்தூர் கூட்ரோடு பகுதியில் ஞானசவுந்தரி, கடப்பந்தாங்கல் பகுதியில் சாவித்திரி ஆகிய மூன்று பெண்களிடம் இருந்து 12 பவுன் சங்கிலியை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தங்க சங்கிலிகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்