குளத்தில் பிணமாக கிடந்த வடமாநில வாலிபர்

ஆற்காடு அருகே வடமாநில வாலிபர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-16 17:03 GMT

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்திபுரம் பகுதியில் உள்ள குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த குளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஆற்காடு டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குளத்தில் கிடந்த உடலை மீட்டனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என விசாரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலீம் (வயது 32) என்பது தெரிய வந்தது. இவர் குளத்தில் கால் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்